Archive for the 'tamil-poem' Category
ஒரு நொடி பிரிவு
நொடிகளுக்குள் ஏன் இவ்வளவு தாமதம்,
கண் சிமிட்டலில் நீ மறைந்து போவதாலா??
Filed under: tamil-poem | Leave a Comment
சுவாசம்
நித்தமும் சுவாசிக்கிறேன்,
உன்னை கடந்து வந்த
காற்று என்ற நம்பிக்கையில்!!
Filed under: tamil-poem | Leave a Comment
தூரம்
நீ ரசித்த நிலவை
நானும் ரசித்த அந்நொடியில்
உணர்ந்தேன்,
தூரம் கண்களில் மட்டுமே
நினைவுகளில் இல்லையென!
Filed under: tamil-poem | 3 Comments
வலைத்தளத்தில் கவிதைகளின் ஒரு தொகுப்பு: http://tamil.koodal.com
அதில் என்னை கவர்ந்த சிலவற்றை இங்கே பதிவு செய்கிறேன்.
வாழ்க்கை
கவிஞர்: அறிவுமதி
மர வியாபாரி பார்க்கிறான்
வேர் முதல் கிளை வரை
குருவிக்கூடு நீங்கலாக!
(http://tamil.koodal.com/poem/hycoo_kavithai.asp?id=939&title=life&author=arivumathi)
மரம்
கவிஞர்: தமிழ்பித்தன்
மரங்கள் பஞ்சம்
மின் கம்பத்தில்
பறவைகள்
(http://tamil.koodal.com/poem/hycoo_kavithai.asp?id=895&title=tree&author=thamizh-pithan)
Filed under: non-technical, tamil-poem | 3 Comments
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்.
இந்த பாடலின் ஒளிப்பதிவு இன்னுமொரு அழகிய கவிதை. அதனால் அதையும் இங்கே பதிவு செய்கிறேன்.
Filed under: non-technical, tamil-poem | 1 Comment
பூவே உனக்காக!!
நீ,
மாற்றான் தோட்டத்து மல்லிகை!
உணர்ந்தால் உடனே மறித்து விடும் மனம்.
மாறாக, உறைத்துவிடுகிறேன்!
இன்றைய நிஜம் என்றும் நிழலாய் நிலைத்து இருக்க.
பின்குறிப்பு: பூவே உனக்காக திரைப்படத்தின் தாக்கத்தில் எழுதியது.
Filed under: non-technical, tamil-poem | Leave a Comment
உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது!
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறது!
மேகமாய் நானும் மாறேனோ அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ.
சூரியன் போல் அவை மாறேனோ என் ஜோதியில் உலகை ஆள்வேனோ.
ஜனனம் மரணம் தெரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ!
கவிஞர்: வைரமுத்து
Filed under: non-technical, tamil-poem | Leave a Comment
என்னவள்
ஹிக்கூ – I
துவண்ட மலர் இங்கே
துளிர்கிறது!!
என்னவள்,
துயில் கலைகிறாள்.
ஹிக்கூ – II
புதிய புவியல் நியதி,
பிரபஞ்சத்தின் மையம்
என்னவள்.
அவளை சுற்றியே
உலகம் இயங்குகிறது,
எனக்கு!!
Disclaimer: This is 100% based on a fictional character
Filed under: non-technical, tamil-poem | 1 Comment
பட்டாசு
ஒரு சிறுவனின்
சீரிய சித்திரம்
இங்கே சிதைக்கப்படுகிறது!!
பின்குறிப்பு: கல்லூரியில் நான் எழுதியது
Filed under: non-technical, tamil-poem | 1 Comment
நீர்வீழ்ச்சி
மலைகளின் நடுவே பாய்கிறதே
இது என்ன,
தண்ணீரின் தற்கொலை முயற்சியா??
பின்குறிப்பு: கல்லூரியில் நான் எழுதியது
Filed under: non-technical, tamil-poem | 2 Comments







